புதன், 20 ஏப்ரல், 2011
நகைச்சுவை
நண்பர் – 1 : ஒருவழியா வீட்ட கட்டி முடிச்சிட்டேன். இருந்தாலும் மனசு
‘திக்கு திக்கு’ன்னு இருக்கு.
நண்பர் – 2 : ஏன்?
நண்பர் – 1 : வீடு கட்டியிருக்கிற நிலம் யாரோடதுன்னு தெரியலியே,
ராமு : ஏண்டா சோகமா இருக்கே?
சோமு : நா ஊர்ல இல்லாத நேரம் பார்த்து, பூட்ட ஒடைச்சி ரூ.50,000-த்த
எடுத்துட்டு போயிட்டிருக்காங்க.
ராமு : உன்ன யாருடா அவ்ளோ பணத்த பூட்டுல வைக்கச் சொன்னது?
சோமு : ………..!!!
தேர்தல் நடத்தை நெறிமுறைகளை தளர்த்தியது தேர்தல் ஆணையம்
தமிழகத்தில் தேர்தல் நடைபெற்ற தேதிக்கும், ஓட்டு எண்ணிக்கைக்கும் இடையில் 1 மாத காலம் இருப்பதால் அரசு அலுவல்கள் முடங்கிப் போவதாகவும், தேர்தல் நடத்தை நெறிமுறைகளை தளர்த்த வேண்டும் என்றும் பல்வேறு தரப்பிலிருந்து தேர்தல் ஆணையத்திற்கு கோரிக்கைகள் விடப்பட்டன. இந்நிலையில் தேர்தல் ஆணையம் நேற்று தேர்தல் நடத்தை நெறிமுறைகளில் சில மாறுதல்களைச் செய்து நேற்று புதிய தேர்தல் நடத்தை நெறிமுறைகளை வெளியிட்டுள்ளது
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)