மறதி நமக்கு மிகவும் பழக்கமான விஷயமாகி விட்டதால் முதலில் ஒரு நிகழ்வை நினைவுபடுத்தி விடுவோம்.
2003ஆம் ஆண்டு.
ஈராக்கின் மீது அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி இறுகிக் கொண்டிருந்தது. ஈராக்கிற்கு அமெரிக்கா விதித்திருந்த கெடு முடிந்து ஐ.நா. சபையின் ஒப்புதல் இல்லாமல் ஈராக்கை விட்டு சதாம் ஹூசைன் வெளியேறுவதற்குக் கெடு விதித்தது. உடனே போரைத் துவக்கிவிட்டது அமெரிக்கா
சதாம் ஹூசைன் தப்பிவிட்டார். அவருடைய தலைக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது அமெரிக்கா. ஈராக்கில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கப் படையின் கையில் சதாம் ஹூசைன் பதுங்குகுழி ஒன்றில் சிக்கியதாக 2003 டிசம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.
2005ஆம் ஆண்டு விசாரணை நடந்து டிசம்பர் 30ஆம் தேதி சதாமுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தூக்கில் ஏற்றப்பட்டார். அப்போது இதை நிறைவேற்றித் தன்னை உயர்த்திக் கொண்டவர் அப்போதைய அமெரிக்க அதிபரான புஷ்.
கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவரான ஒபாமா 2009ல் அமெரிக்க அதிபரான போது பலர் அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். ”நம்மால் முடியும்” என்ற வாசகத்தை முன்வைத்த அவர் செய்தது என்ன?
புஷ்ஷைவிட இவர் எந்த விதத்தில் மாறியிருக்கிறார்?
அதே ஒபாமாவின் மதிப்பு சரிந்திருப்பதைப் புலப்படுத்தின அண்மையில் அங்கு நடத்தப்பட்ட சில கருத்துக் கணிப்புகள். அன்று ஜார்ஜ்புஷ் சதாம் ஹூசைன் செய்த அதே தந்திரத்தைச் செயல்படுத்தினார் ஒபாமா.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக