வெள்ளி, 6 மே, 2011

வானம்


natpuதமிழ் சினிமாவுக்கே உரித்தான ஒரே மாதிரி கதை சொல்லும் பாணியிலிருந்து விலகி - இதில் ஐந்து கிளைக் கதைகள். (கொஞ்சம் ஆச்சர்யப்பட வேண்டியதிருக்கிறது). கடைசியில் மருத்துவமனைச் சூழலில் ஐந்து ட்ராக்குகளும் ஒன்று சேர்ந்து விலகுகின்றன.
natpuமலையாளத்தில் இதைவிட அதிகமான ட்ராக்குகளுடன் சமீபத்தில் ஒரு படம் வெளியாகி அதற்கு வணிகரீதியான வெற்றியும் கிடைத்திருக்கிறது. கேபிள் இணைப்புக் கொடுக்கிற சேரி இளைஞனாக சிம்பு. அவர் காதலிக்கும் பெண்ணிடம் தன்னை வசதியானவனாகக் காட்டிக்  கொள்கிறார். புத்தாண்டுக் கொண்டாட்டத்திற்காக ஒரு ஹோட்டலில் நடக்கும் விருந்துக்கு நாற்பதாயிரம் ரூபாயில் டிக்கெட்டுக்கள் வாங்கித்தர ஒப்புக் கொள்கிறார். அதற்காக தெருவில் போகும் பெண்களின் சங்கிலியை அறுக்கப் போய்ப் போலீசில் பிடிபடுகிறார்.
கடைசியில் தன்னுடைய மகனை உப்பளத்தில் கொத்தடிமையாக இருக்கும் கொடுமையிலிருந்து மீட்கத் தன்னுடைய கிட்னியை விற்க மாமனாருடன் சென்னைக்கு வரும் சரண்யாவின் பணத்தைத் திருடி இறுதி நேரத்தில் ‘மனம் திருந்தி’  ஒப்படைத்துவிட்டு கண்கலங்குகிறார் சிம்பு.
natpuதன்னுடைய நலத்தை மட்டும் முன்னிறுத்தும் நடனக்குழு நடத்தும் இளைஞனாக பரத்,  இந்துத்துவா ஆட்களால் ஊர்வலத்திற்கிடையே மறிக்கப்பட்டு தாக்கப்பட்டு, கர்ப்பமான மனைவியின் கருகலைக்கப்பட்டதை அறிந்து ஓவென்று கதறி அழும் இஸ்லாமியராக பிரகாஷ்ராஜ், தரகர்களிடமும், காவல் துறையினரிடமும்  படாதபாடுபடும் பாலியல் தொழிலாளியாக அனுஷ்கா என்று பல கிளைப் பாத்திரங்கள்.
சில வித்தியாசமான காட்சிகள். கிட்னியை நகரத்தில் விற்க வரும் சரண்யாவும் முதுமையேறிய அவருடைய மாமனாரும் கிட்னித் தரகர்கள் ஒட்ட வைக்கும் பொய்யைச் சரிவரச் சொல்ல முடியாமல் திணறுகிற காட்சி.. தன்னுடைய தோழியைக் காப்பாற்றுவதற்காக மருத்துவமனையில் டாக்டரிடம் திரும்பத் திரும்பக் கெஞ்சும் பாலியல் தொழிலாளியான அனுஷ்கா. ''உங்களுடன் படுத்துக்கிறேன்.. எப்படியாவது இவளைக் காப்பாத்துங்க'' என்று மன்றாடுகிற இன்னொரு காட்சி.
natpuதன்னுடைய ''இமேஜை'' எல்லாம் தூக்கிக் கடாசிவிட்டு நடித்திருக்கிற சிம்பு, அனுஷ்கா, பிரகாஷ்ராஜ், சரண்யா என்று பலருடைய நடிப்பு படத்திற்கு உயிரூட்டினாலும் பல நெருடல்கள்.
ஆரம்பத்தில் இஸ்லாமியர்கள் அந்நியத் தன்மையுடன் நடத்தப்படும் விதத்தைப் பற்றி எல்லாம் சொல்லிவிட்டுக் கடைசியில் மக்கள் அடர்ந்திருக்கிற பொது மருத்துவமனையில் துப்பாக்கிகளுடன் சகலரையும் தாக்குபவர்களாக இஸ்லாமியத் தீவிரவாதிகளைக் காட்டியிருப்பதும் பொருத்தமாக இல்லை. அதிலும் தான் சிகிச்சை எடுத்துக் கொண்டிருக்கிற மருத்துவமனையிலேயே தீவிரவாதியான ஜெயப்பிரகாஷ் உடம்பில் வெடிமருந்தைக் கட்டிக் கொண்டு தாக்குதலில் ஈடுபடுகிறாராம்.
natpuஅதுவரை திருடுவதற்காக மற்றவர்களை மோப்பம் பிடித்து விரட்டித் திரியும் சிம்பு மருத்துவமனையைக் காப்பாற்ற வெடிகுண்டுத் தீவிரவாதியைக் கட்டிப் பிடித்தபடி கீழே விழுந்து உயிரைத் துறந்து ''தியாகி'' ஆகி விடுகிறார். அப்போது ஒருவர் ''சாவையே சாகடிச்சுட்டாண்டா'' என்று செமையான டயலாக் வேறு பேசும்போது உடம்பெல்லாம் மிளகாய்ப்பொடி தடவிய மாதிரி ஜிவ்வென்று காந்துகிறது.
natpu''கோ'' படத்தில் '' நக்சல்கள்''.  இந்தப் படத்தில் '' இஸ்லாமியத் தீவிரவாதிகள்''. ஏனிந்த மாதிரியான மிகையான - யதார்த்தத்திற்குப் பொருந்தாத ''தீவிரங்கள்''? (முன்பெல்லாம் தேசியத்தைக் கடித்துக் குதறும் குத்தகை தாரர்களான விஜயகாந்த், அர்ஜூன் நடிக்கும் படங்களில்தான் இப்படிப்பட்ட ''தீவிரவாத அபத்தங்களைப் பார்க்க முடியும். இப்போது அதற்குச் சற்றும் குறைச்சலில்லாமல் அதே அஃமார்க் தீவிரவாத ''மசாலா'' தொடர்ந்து கொண்டிருக்கிறது)
தமிழ் சினிமாவும், தீவிரவாதக் குளறுபடிகளும் - என்று கோடம்பாக்கத்துக் கதைக் களத்தைப் பற்றித் தனியாகத் ''தீவிரமான'' ஆராய்ச்சியே பண்ண வேண்டும்  போலிருக்கிறது.


Comments

மே 25ல் +2 மதிப்பெண் பட்டியல் வழங்கப்படும்: தேர்வுத்துறை அறிவிப்பு



இந்த வருடம் 7.7 லட்சம் மாணவர்கள் +2 தேர்வு எழுதியுள்ளனர். மே 9ந் தேதி தேர்வு முடிவுகள் வெளியிடப்பட இருக்கின்றன. இதற்கான தீவிர ஏற்பாடுகளை தேர்வுத் துறை செய்து வருகின்றது. தேர்வு முடிவு அறிவிக்கப்பட்ட பின் 10 நாட்களில் மதிப்பெண் பட்டியல் தயார் செய்யப்படும். பின்னர் ஒரே நாளில் அனைத்துப் பள்ளிகளுக்கும் பட்டியல் அனுப்பி வைக்கப்படும். மே 25ஆம் தேதி அன்று மாணவர்கள் அந்தந்த பள்ளிகளுக்குச் சென்று தங்களுடைய மதிப்பெண் பட்டியலை பெற்றுக் கொள்ளலாம் என்று தேர்வுத் துறை அறிவித்துள்ளது.

ஒசாமா விவகாரம் : முன்னாள் அதிபர் முஷாரப் பகிரங்கக் குற்றச்சாட்டு

பாகிஸ்தானில் இத்தனை காலம் ஒசாமா பின்லேடன் தங்கியிருந்தது மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.  இதற்கு ஐ.எஸ்.ஐ.யின் கவனக்  குறைவே காரணமாகும். உளவுப் பிரிவினருக்குத் தெரியாமல் இந்நிகழ்ச்சி நடந்திருப்பது எனக்கு அதிர்ச்சியை அளிக்கிறது. ஆனால் அமெரிக்கா கூறுவது போல் பாகிஸ்தான் எப்பொழுதும் அல்-குவைதா அமைப்புக்கோ, தாலிபான்களுக்கோ உதவியது கிடையாது என்றும் பாகிஸ்தானின் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ.யின் மீது பகிரங்கமாக முன்னாள் அதிபர் பர்வேஷ் முஷாரஃப் குற்றம் சாட்டியுள்ளார்.

டோர்ஜீ காண்டு உடல் இன்று அடக்கம் செய்யப்படுகிறது

கடந்த சனிக்கிழமை அன்று அருணாசலப் பிரதேச முதல்வராக இருந்த டோர்ஜி காண்டூ தவாங்கிலிருந்து இடாநகருக்குச் செல்லும் வழியில் லோக்தாங் பகுதியில் ஜாங் அருவிப் பகுதியில் அவர் சென்ற ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. 5 நாள் தேடுதல் வேட்டைக்குப் பிறகு அவருடைய உடல் அழுகிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, அஞ்சலிக்காக இடாநகருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. இன்று பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி அஞ்சலி செலுத்துகின்றனர். பின்னர் காண்டூவின் சொந்த நகரமான தவாங்கில் அரசு முழு மரியாதையுடன் அவர் உடல் அடக்கம் செய்யப்படுகிறது. பிற தலைவர்களும் அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

நேற்று – சதாம் ஹூசைன் இன்று – ஒசாமா பின்லேடன் – பறக்கவிடப்படும் அமெரிக்க நியாயங்கள்



மறதி நமக்கு மிகவும் பழக்கமான விஷயமாகி விட்டதால் முதலில் ஒரு நிகழ்வை நினைவுபடுத்தி  விடுவோம்.
2003ஆம் ஆண்டு.
ஈராக்கின் மீது அமெரிக்காவின் கிடுக்கிப்பிடி இறுகிக்  கொண்டிருந்தது. ஈராக்கிற்கு அமெரிக்கா விதித்திருந்த கெடு முடிந்து ஐ.நா. சபையின் ஒப்புதல் இல்லாமல் ஈராக்கை விட்டு சதாம் ஹூசைன் வெளியேறுவதற்குக் கெடு விதித்தது. உடனே போரைத் துவக்கிவிட்டது அமெரிக்கா

சதாம் ஹூசைன் தப்பிவிட்டார். அவருடைய தலைக்கு 125 கோடி ரூபாய் பரிசு அறிவித்தது அமெரிக்கா. ஈராக்கில் தேடுதல் வேட்டை நடத்திக் கொண்டிருந்த அமெரிக்கப் படையின் கையில் சதாம் ஹூசைன் பதுங்குகுழி ஒன்றில்  சிக்கியதாக 2003 டிசம்பர் 14 ஆம் தேதி அறிவிக்கப்பட்டது.

2005ஆம் ஆண்டு விசாரணை நடந்து டிசம்பர் 30ஆம் தேதி சதாமுக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டு தூக்கில் ஏற்றப்பட்டார். அப்போது இதை நிறைவேற்றித் தன்னை உயர்த்திக் கொண்டவர் அப்போதைய அமெரிக்க அதிபரான புஷ்.

கறுப்பர் இனத்தைச் சேர்ந்தவரான ஒபாமா 2009ல்  அமெரிக்க அதிபரான போது பலர் அமெரிக்க நிலைப்பாட்டில் மாற்றம் வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்கள். ”நம்மால் முடியும்” என்ற வாசகத்தை முன்வைத்த அவர் செய்தது என்ன?

புஷ்ஷைவிட இவர் எந்த விதத்தில் மாறியிருக்கிறார்?


அதே ஒபாமாவின் மதிப்பு சரிந்திருப்பதைப் புலப்படுத்தின அண்மையில் அங்கு நடத்தப்பட்ட சில கருத்துக் கணிப்புகள். அன்று ஜார்ஜ்புஷ்  சதாம் ஹூசைன் செய்த அதே தந்திரத்தைச் செயல்படுத்தினார் ஒபாமா.


பாகிஸ்தானில் தீவிரவாதிகள் இருந்தால் மீண்டும் தாக்குதல் : அமெரிக்க அதிபர் அறிக்கை

உலகின் மிகப் பெரிய பயங்கரவாதியான ஒசாமா பின்லேடனை பாகிஸ்தானிலேயே வைத்து சுட்டுக் கொன்று விட்டோம். அதுபோலவே பாகிஸ்தானிலுள்ள பயங்கரவாதிகளை அந்நாட்டு அரசாங்கம் அழிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால் ஒசாமாவைப் போலவே மற்ற பயங்கரவாதிகளையும் அமெரிக்கா அழிக்கத் தயங்காது என்று அதிபர் ஒபாமா அறிவித்துள்ளார்.

MANSUR AND GOBAL